Welcome

நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே மக்கள் அனைவரும் கல்வி கற்று விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் 1927-இல் ஆரம்பப்பள்ளியாக திரு.சு.கதிரேசன் செட்டியார் அவர்களால் தொடங்கப்பெற்றது.

” உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் .”

என்ற பொய்யாமொழிக்கேற்ப வாழ்ந்த அண்ணல் காந்தியடிகளின் மேல் கொண்ட பற்றினால் தன பெயரோடு ,தேசத்தைக் காத்தசெம்மல் அவர்களின் பெயரை இணைத்து தாம் ஆரம்பித்த பள்ளிக்கு சு.க.தி .காந்தி ஆரம்பபள்ளி என்று பெயர் சூட்டப்பெற்றது.

கிராமப்புற மாணவர்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோககில் ஆரம்ப்பள்ளியாக இருந்த இப்பள்ளி சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1938 -ஆம் ஆண்டே நடுநிலைப்பள்ளியாக திகழ்வதற்கு தகுதி பெற்றது.

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா படித்த இப்பள்ளி மேலும் அவரைப்போன்ற சிறந்த மாணவர்களை உருவாக்கி பல நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களையும் கொண்ட இப்பள்ளி 1961-ஆம் உயர்நிலைப்பள்ளியாக சிறப்புப்பெற்று இன்று பொன்விழா கண்டு சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டு வருகிறது.