கலை இலக்கியப் போட்டிகள்

நாள்: 27.01.2012  வெள்ளிக்கிழமை நேரம்: 10.௦௦ மணி
இடம்: சு.கதி.காந்தி உயர்நிலைப்பள்ளி இராயவரம்
               மனித நேயத் தந்தை,வாழ்நாள் சாதனையாளர் ,இராயவரம் வள்ளல்  M.A.M.பழனியப்ப செட்டியார் அவர்களின் இலக்கிய வட்டத்தின்  சார்பில் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 5-ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகள் இராயவரம் சு.கதி.காந்தி உயர்நிலைப்பள்ளியில்  27.01.2012  வெள்ளிக்கிழமையன்று  மிகச் சிறப்பாக நடைபெற்றன.
கோவை குழந்தைக்கவிஞர் திரு.செல்லகணபதி  அவர்கள் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.முன்னதாக திருமதி.J.கலைச்செல்வி M.A;M.Ed;M.Phil  அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
        பள்ளிச் செயலர் ,கோவை நகரத்தார் சங்கத் தலைவர் ,கல்விக்காவலர் திரு.பழ.சுப்ரமணியன் B.Com அவர்கள் சிறப்பான வாழ்த்துரையை வழங்கினார்.
தனது தந்தையாரின் பெருமைகளை இனிதாக எடுத்துரைத்து மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் கல்வியுடன் பண்பையும் பெற்றிருக்க வேண்டும் என்று
வாழ்த்தியது கேட்போரின் நெஞ்சங்களை நெகிழ வைத்தது.
 சிறப்பு விருந்தினர்   குழந்தைக்கவிஞர் திரு.செல்லகணபதி  அவர்களையும் .நடுவர்களையும்  பள்ளிச் செயலர் அவர்களையும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார் .
தொழிலதிபர் திரு. N.ராஜேந்திரன் B.Sc.அவர்கள் இராயவரம் பொது மக்கள் சார்பாக நிர்வாகத்தினருக்கும் .சிறப்பு விருந்தினருக்கும் .நடுவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தார்.
         * 6  முதல் 10 வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு கணினி உலகம் என்ற தலைப்பில் பேச்சுப்  போட்டியும் ,வானம் வசப்படும் என்ற தலைப்பில் கட்டுரைப்   போட்டியும் ,நல்ல கருத்துள்ள கிராமியப் பாடல்கள் என்ற தலைப்பில் பாட்டுப் போட்டியும் நடைபெற்றன.
சிறு குழந்தைகளையும் போற்றி வளர்த்திட குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பா பாடல்களைப் பாட்டுப் போட்டிக்குத் தலைப்பாக தேர்ந்து எடுத்திருந்தமை பாராட்டுக்குரியதாக இருந்தது.
போட்டிகளின் நடுவர்களாக  புதுகை  மாமன்னர் கல்லூரி பேராசிரியர்களும் . தலைமை ஆசிரியர்களும் ,தமிழாசிரியர்களும் பட்டதாரி   ஆசிரியர்களும் வருகை தந்து பொறுப்புடன் செயல்பட்டு   போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூபாய் 1250-ம் ,இரண்டாம்  பரிசாக ரூபாய் 600-ம் ,மூன்றாம் பரிசாக ரூபாய் 400-ம் ,ஆறுதல் பரிசாக  ரூபாய் 250 -ம் நடைபெற இருக்கும் இலக்கிய மன்ற ஆண்டு விழாவில்   வழங்குவதாக செயலர் அவர்கள் அறிவித்தார் .
  உதவித் தலைமையாசிரியர் திரு.அழ. பழனியப்பன் M.Sc;M.Ed ;M.Phil அவர்கள் நன்றி கூறினார்.
   புதுகை  நகரின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் ஏறத்தாழ 100 மாணவர்கள் பங்கேற்றனர்,
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தொழிலதிபர் திரு. N.ராஜேந்திரன் B.Sc.அவர்கள் சிறப்பான மதிய உணவினை வழங்கி உள்ளம் மகிழ விழா இனிதே நிறைவடைந்தது.
This entry was posted in Campus News. Bookmark the permalink.